
கூகுளுடன் இணைந்து புதிய வசதிகளுடன் மொபைல் இணையதளத்தை பிளிப்கார்ட் தொடங்கியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட், முழுவதுமாக மொபைல் அப்ளிகேசனில் பொருட்களை வாங்குவதற்கான வசதிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், குறைந்த திறன் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் எளிமையாக பயன்படுத்தும் விதமாக, அப்ளிகேஷனில் உள்ள வசதிகளோடு மொபைல் இணையதளத்தை பிளிப்கார்ட் உருவாக்கியுள்ளது.
மொபைலில் உள்ள கூகுள் குரோம் பிரவுசரில் flipkart.com என்று திறந்தால், பிரவுசர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய கேட்கும். அதனை இன்ஸ்டால் செய்து வைத்துக்கொண்டால், மொபைல் அப்ளிகேஷன் போன்ற தோற்றத்தில் இணையதளம் திறக்கும்.
Flipkart Lite என்றழைக்கப்படும் இந்த வெப் அப்ளிகேஷன் மூலம், Notification ம் பெறலாம்.
பிளிப்கார்ட் தனது இணையதளத்தை மூடிவிட்டு, மொபைல் அப்ளிகேஷனில் மட்டும் வர்த்தகத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக அண்மைகாலமாக பேசப்பட்டு வருகிறது. அப்ளிகேஷனில் பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகை திட்டங்களை பிளிப்கார்ட் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்நிலையில், மொபைல் பிரவுசருக்கான அப்ளிகேஷனை பிளிப்கார்ட் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பழைய FLIPKART அப்ளிகேஷன்
Delete செய்த பிறகு
புதிய FLIPKART
அப்ளிகேஷன்
டவுன்லோடு செய்யவும்.
>>>>> DOWNLOAD APP>>>
0 comments:
Post a Comment